Description
ABC மால்ட் என்பது ஆப்பிள் (Apple), பீட்ரூட் (Beetroot), கேரட் (Carrot) ஆகிய மூன்று பொருட்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஆரோக்கியமான பானமாகும். இந்த மூன்று பொருட்களும் உடலுக்கு தேவையான பல்வேறு சத்துக்களை வழங்குகின்றன.
ஆப்பிளின் நன்மைகள்:
வைட்டமின்கள் A, E, B, C மற்றும் நார்ச்சத்துகள் அதிகம்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
உணவின் செரிமானத்தை மேம்படுத்துகிறது.
பீட்ரூட்டின் நன்மைகள்:
வைட்டமின்கள் A, C, B, இரும்புசத்து, பொட்டாசியம், மெக்னீசியம் போன்றவை நிறைந்துள்ளன.
கல்லீரலின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை வெளியேற்ற உதவுகிறது.
கேரட்டின் நன்மைகள்:
கண்களின் ஆரோக்கியத்திற்கு முக்கியமான பீட்டா கரோட்டின், நியாசின், மெக்னீசியம், செலினியம் போன்ற சத்துகள் உள்ளன.
நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது.
எலும்புகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவுகிறது.
ABC மால்ட் தயாரிக்கும் முறை:
1. ஆப்பிள், கேரட், பீட்ரூட் ஆகியவற்றை நன்றாக கழுவி தோலை நீக்கி துருவி கொள்ளவும்.
2. இவற்றை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து விழுதாக மாற்றவும்.
3. ஒரு கடாயில் இந்த விழுதை சேர்த்து, நாட்டு சர்க்கரை சேர்த்து தண்ணீர் சத்து குறையும் வரை கிளறி வைக்கவும்.
4. பாதாம், முந்திரி, ஏலக்காய் ஆகியவற்றை தனியாக வறுத்து பொடியாக அரைத்து, மேலே உள்ள கலவையில் சேர்த்து நன்றாக கலக்கவும்.
5. இந்த கலவை குளிர்ந்த பிறகு, காற்று புகாத டப்பாவில் சேமித்து வைத்துக் கொள்ளலாம்.
இந்த மால்டை பாலில் கலந்து தினமும் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை வழங்கும்.
Reviews
There are no reviews yet.